பாடகி : அண்டாரா நாண்டி
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
பாடல் ஆசிரியர் : சிவா அனந்த்
ஹா..ஆஅ..ஆஅ..ஆ..ஆஆ…
பாத மாறும் மேகம்
எங்கோ தொலைந்தவள் தானோ
வானும் நீரும் சேரும்
என்றோ ஓர் நாள் தானோ
ஆழியிலே தொடு மெதுவாக ஏலோ ஏலேலோ
வான் வெளியின் மின் ஒளியில் செல்ல ஏலோ ஏலேலோஅலைகடல் ஆழம் நிலவு அறியாதோ
ஏலோ ஏலேலோ
இன்பம் துன்பம் ரெண்டும்
இடம் பொருள் மாறும்
இரவுகள் பகல் ஆகும்
முகில் மழை ஆகும்
முறுவலும் நீர் ஆகும்
வான் எங்கும் சாயாத செஞ்சூரியன்
வரதோ அருங்காலையில் நம் பூமியில்
நான் ஒரு முறை வாழ்ந்திட
மறு கரை ஏறிட
பல பல பிறவிகள் கொள்வேனோ
சொல்லிடு
அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ
ஏலோ ஏலேலோ
பேசாத மொழி ஒன்றில் காவியமா
தானாக உருவான ஓவியமா
தாய் இன்றி கருவான ஓர் உயிரா
ஆதாரம் இல்லாத காதலா
கனா இடை வெளியில் கரம் பிடிப்பாயா
தரை தொடும் வரையில் மணம் முடிப்பாயா
ஓர் பார்வை ஓர் வாக்கு தாராயோ
அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ
ஏலோ ஏலேலோ
அடி மன தாகம் விழியில் தெரியாதோ
ஏலோ ஏலேலோ
பாத மாறும் மேகம்
எங்கோ தொலைந்தவள் தானோ
வானும் நீரும் சேரும்
என்றோ ஓர் நாள் தானோ
ஆழியிலே தடு மெதுவு எள்ள
ஏலோ ஏலேலோ
வான் வெளியின் மின் ஒளியில் செல்ல
ஏலோ ஏலேலோ