கறுப்பு !
கண்ணுக்குள் உள்ள கண்மணி கறுப்பு
என் கண்ணுக்குள் உள்ள என்னவனும் கறுப்பு ..!
காவியம் பாடும் குயில் கூட கறுப்பு
என் ஓவியம் பாடும் என் உயிர் கூட கறுப்பு ..!
காந்தத்தின் நிறமோ தனி கறுப்பு என்னை காந்தம் போல் கவரும் அவனோ தனி கறுப்பு ..!
ஆண்டவன் சிலையும் கறுப்பு என்னை ஆள்பவன் கலை கையும் கறுப்பு ..!
ஆயிரத்தில் ஓர் கறுப்பு - அவன் ஆயிரத்தில் ஓர் பிறப்பு ..!
இரவினில் பெரும் கறுப்பு அவன் முடியினில் கரும் கறுப்பு ..!
கருவறையும் கறுப்பு கருங்கல்லும் கறுப்பு அவன் மன அறையோ கருமை இல்லா மிக சிறப்பு ..!
என்னவனே....................! நீ கறுப்பு எனிலும் ....என் முகச் சிரிப்பு.....................!
மூச்சிருப்பு.........................!
